» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவாரணம்

வெள்ளி 19, மே 2017 2:17:43 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் அருகே சூறைக்காற்றுடன் இடி விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சண்முகநாதன் எம்.எல்.ஏ. உதவிகள் வழங்கினார்.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துசாமி (46). கருங்குளத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் முத்துசாமி, இசக்கியம்மாள்,கணபதி ராமசாமி,முருகன் உட்பட 14 பேர் வேலை பார்த்து கொண்டிருந்த போது பலத்த மழை பெய்துள்ளது.தொடர்ந்து பயங்கரமாக இடியும் தாக்கியுள்ளது. இதில் இடி விழுந்த அதிர்ச்சியில் 14 பேரும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். மேலும் இதில் பாதிப்பேருக்கு மேல் காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களை நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி பழங்கள் வழங்கினார்.உடன் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜ் நாராயணன், வழக்கறிஞர் திருப்பாற்கடல், ஆறுமுகநயினார்,பாலஜெயம்,சாம்ராஜ் உட்பட பலர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Sterlite Industries (I) Ltd



Johnson's Engineers

selvam aqua

Universal Tiles Bazar


New Shape Tailors



Thoothukudi Business Directory