» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக ஆர்வலர் நயினார் குலசேகரன் காலமானார்

ஞாயிறு 30, ஜூலை 2017 11:00:03 AM (IST)

தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் நயினார் குலசேகரன் காலமானார்.

துாத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் குலசேகரன். இவர் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின் வாழ்வாதாரமான தாமிரபரணி நதியை காப்பாற்ற தாமிரபரணி நதிநீர் பாது காப்பு பேரவையை ஆரம்பித்து அதன் நிறுவனராகவும் இருந்து வந்தார்.

தாமிரபரணியை காக்க பல்வேறு போராட்டங்களையும், அதற்காக மாவட்ட ஆட்சியர் முதல் பல அதிகாரிகளை சந்தித்து பல மனுக்களை அளித்துள்ளார். தாமிரபரணி வரலாறு தொடர்பான புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் சமூக ஆர்வலராகவும், பத்திரிகை துறையிலும் நயினார்குலசேகரன் இருந்துள்ளார். 

இந்நிலையில் முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த நயினார் குலசேகரன் இன்று காலை காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை சுமார் 4 மணியளவில் அவரது சொந்த ஊரான நட்டாத்தியில் நடைபெற உள்ளது.நயினார் குலசேகரன் மறைவிற்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியூஜே) துாத்துக்குடி மாவட்ட கிளை தனது இரங்கலை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam



Universal Tiles Bazar



Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory