» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி பொதுமக்கள் மறியல் : திருச்செந்தூர் - தூத்துக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளி 4, ஆகஸ்ட் 2017 11:03:08 AM (IST)



முக்காணியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. . 

தூத்துக்குடி மாவட்டம், முக்காணியில் கடந்த சில மாதங்களாகவே கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக முக்காணி சுற்றுவட்டாரப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வாழவல்லான் நீரேற்று நிலையத்திற்கு ஏரலில் இருந்து தண்ணீர் வரவில்லையாம். இதனால் முக்காணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பல கிராமங்களில் தண்ணீரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

ஆனால், இதுவரை குடிநீர் பிரச்சனையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்காணிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி 150 பெண்கள் உள்பட சுமார் 500பேர் முக்காணி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்தது ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பயஸ், மற்றும் அதிகாரிகள், ஆத்தூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்காணிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 



மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் பிரச்சனைக்காக மறியலில் ஈடுபட்டபோது குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வே்ணடும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த மறியலால் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


New Shape Tailors

Johnson's Engineers

selvam aqua



Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory