» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராபிக் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.2.5 லட்சம் நகை, பணம் கொள்ளை: தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 7, ஆகஸ்ட் 2017 5:28:08 PM (IST)



தூத்துக்குடியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகன் வீட்டில்  ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, கோரம்பள்ளம் கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தனகுமார். இவர் தூத்துக்குடியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளராக உள்ளார். இவரது மகன் ராமகிருஷ்ணன் (25). தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இவர் எப்பொதும் வென்றான் அருகே உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று மாலையில் வீடுதிரும்பியபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, 5ஆயிரம் பணம், மற்றும் செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.5லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் சிப்காட் போலிசார் வழக்குப் பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போக்குவரத்து காவல்துறை அதிகாரியின் மகன் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



New Shape Tailors





Johnson's Engineers





Thoothukudi Business Directory