» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா 12ம் தேதி துவக்கம்: 21ம் தேதி தேரோட்டம்

வியாழன் 10, ஆகஸ்ட் 2017 4:10:49 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா 12ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21ம் தேதி  நடக்கிறது.

அறுபடை வீடுகளில் அழகியதும், அலை வீசும் கடலருகே அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா நாளை மறுநாள் (12ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. 

அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா நடக்கிறது. கோயில் இரண்டாவது பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணிக்கு மேல் கடக லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது. மாலையில் 4 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்திருளி வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 16ம் தேதி 5ம் திருவிழா அன்று இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. வரும் 18ம் தேதி 7ம் திருவிழாவன்று அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் உருக சட்டசேவையும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது. 19ம் தேதி 8ம் திருவிழாவை அன்று அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர். 

இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வரும் 21ம் தேதி 10ம் திருவிழா அன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 23ம் தேதி 12ம் திருவிழாவின்று சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுக்கு பின்னர் வீதி உலா நடக்கிறது. விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்திசொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்ஜோதி ஆகியோர் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து

உண்மைAug 11, 2017 - 01:41:14 PM | Posted IP 59.99*****

அசுரனை அழித்த முருகா சரணம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

Sterlite Industries (I) LtdNew Shape Tailors


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education

selvam aqua
Thoothukudi Business Directory