» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்.பி. சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி..? அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்!!

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 4:48:42 PM (IST)

அதிமுக அணிகள் விரையில் இணைய வாய்ப்புள்ளதால், எஸ்பி சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்தபோது அவர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார் என்று மெரினா கடற்கரையில் ஓ.பன்னீர் செல்வம் மௌன போராட்டத்தை நடத்தினார். இதனால் தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசி தரப்பு ஏற்பாடு செய்தது. 

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதனிடையே அணிகள் பிரிந்ததால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகள் இணையத் தடையாக இருப்பது சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது மட்டுமே என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். இதையடுத்து டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

டெல்லியில் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியானது.  மேலும்,  அணிகள் இணைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கட்சியிலும், ஆட்சியலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென் மாவட்டத்தை பொறுத்தளவில் ஓ.பி.எஸ். தரப்பிற்கும், டி.டி.வி. தினகரன் தரப்பிற்கும் தான் ஆதரவு அதிகமுள்ளது. 

குறிப்பாக முக்கிய நிர்வாகிகள் தினகரன் தரப்பிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு ஓ.பி.எஸ். க்கு அதிகம் உள்ளதாககூறப்படுகிறது. எனவே தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். அணியின் ஆதரவை பெறுவதற்கும், ஏற்கனவே அதிமுகவில் சசிகலா தரப்பால் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் வகையிலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுமான எஸ்.பி. சண்முகநாதனை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

ஓ.பி.எஸ். தரப்பில் 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் செம்மலை, மாபா. பாண்டியராஜன், எஸ். பி. சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்பதில் ஓ.பி.எஸ். அணியின் தலைவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். தென் மாவட்டத்தில் தினகரனை ஆதரிக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களை அப்பதவிகளில் நியமிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




selvam aqua


Nalam Pasumaiyagam

New Shape Tailors


Universal Tiles Bazar

Johnson's Engineers



Thoothukudi Business Directory