» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் படுகொலை: காதல் விவகாரத்தில் வாலிபர் வெறிச்செயல்

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 10:13:39 PM (IST)

கயத்தாறு அருகே காதல் திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவையா மகன் பாண்டி (55). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது உறவினரின் மகளை அதே ஊரைச் சேர்ந்த காளிராஜ் (27) என்பவர் காதலித்து வந்தாராம். மேலும் திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். இந்த திருமணத்திற்கு பாண்டி எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த காளிராஜ் இன்று மாலை 6 மணியளவில் அங்குள்ள பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தில் இருந்த பாண்டியிடம் வந்த தகராறில் ஈடுபட்டுள்ளார். 

தனது திருமணத்திற்கும் காதலுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி அவர் பாண்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து பாண்டியின் முகத்தில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயம் அடை்நது உயிருக்கு பேராடடிக்கொ்ணடிருந்த பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை்ககு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து காளிராஜை தேடி வருகின்றனர். 

கயத்தாறு பகுதியில் 2 மணி நேர இடைவெளியில் 2 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன், கோவில்பட்டி டிஎஸ்பி முருகவேல் ஆகியோார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர் கொலைகளால் அங்கு பதற்றம் நிலவி வருவதால் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

jesus redeems

Sponsored Ads


Universal Tiles Bazar



Johnson's Engineers


New Shape Tailors


Nalam Pasumaiyagam

selvam aqua

CSC Computer Education

Black Forest Cakes

Pop Up Here




Thoothukudi Business Directory