» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக அணிகளை இணைக்க மோடி கட்டப்பஞ்சாயத்து : தூத்துக்குடியில் திருநாவுக்கரசர் பேட்டி

சனி 12, ஆகஸ்ட் 2017 11:41:51 AM (IST)

அதிமுக அணிகளை இணைக்க மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா என்றைக்கு மருத்துவமனையில் படுத்தாரோ? அன்றிலிருந்து தமிழக அரசும் படுத்த படுக்கையாக உள்ளது. சென்னையில் வெள்ளம் பாதித்தபோது 88 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு வழங்கவில்லை. நீட் தேர்வால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நீட் தேர்விலிருந்து ஒரு ஆண்டு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால் தற்போதைய அரசு சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் கொண்டு வந்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இன்று விவசாயிகளின் பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம். ஒரு கோடி இளைஞர்கள் இன்று வேலையில்லாமல் உள்ளனர்.

தற்போது அ.தி.மு.க. 3, 4 அணிகளாக பிரிந்து உள்ளதற்கு பா.ஜ.க. தான் காரணம். பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாததால் இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக அணிகளை இணைக்க மோடி கட்டப்பஞ்சாயத்து வருகிறார்.  தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar




Nalam Pasumaiyagam

selvam aqua

New Shape Tailors


Johnson's Engineers




Thoothukudi Business Directory