» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை முயற்சி : போலீஸ் விசாரணை

வியாழன் 21, செப்டம்பர் 2017 4:46:35 PM (IST)

கோவில்பட்டியில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் புதுக்கிராமம் மெயின் சாலையில் மெடிக்கல் மற்றும் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு அருகில் புதுக்கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரும் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இன்று காலையில் வழக்கம் போல பாலகிருஷ்ணன் மற்றும் பேச்சிமுத்து இருவரும் கடைகளை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உள்ளே சென்று பார்த்த போது எவ்வித பொருளோ, பணமோ திருடு போகவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு இருவரும் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். எப்போது பரபரப்பாக இருக்கும் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொள்யை முயற்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

New Shape Tailors

selvam aqua


Universal Tiles BazarThoothukudi Business Directory