» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாக்டரின் பாலியல் தொல்லையால் நர்ஸ் தற்கொலை? : உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வியாழன் 21, செப்டம்பர் 2017 4:53:26 PM (IST)கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் டாக்டரின் பாலியல் தொல்லையால் நர்சாக பணியாற்றிய இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மணி, இவர் பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமாலா, இவர்களுக்கு பூரணி, தாட்சாயிணி (எ) அம்மு(20). பூரணி தனியார் கார்மெண்ட்ஸ்சில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தான் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தாட்சாயிணி 12ம்வகுப்பு வரை படித்த பின்பு, தனியார் நர்சிங் இன்ஸ்டியூசினில் சேர்ந்த 1வருட சான்றிதழ் நர்சிங் பயின்றுள்ளார்.பின்னர் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த 1வார காலமாக ரொம்ப சேர்வடைந்து காணப்பட்ட தாட்சாயிணி நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு போய்விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் தாட்சாயிணி மயக்கமடைந்து, அவரது வாயில் இருந்து நுரைவந்ததை பார்த்த அவரது தாய் மணிமாலா மற்றும் அவரது சகோதிரி பூரணி, உறவினர்கள் தாட்சாயிணியை அவரது பணிபுரிந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை உள்ளே கூட விடமால் இங்கு பார்க்க முடியாது, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல சொல்லியுள்ளனர். இதனை தொடர்ந்து தாட்சாயிணி உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அதன் பிறகு தான் தாட்சாயிணி விஷம் அருந்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் தாட்சாயிணி அங்கு சிகிச்சை பலன் இல்லமால் உயிர் இழந்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது தாட்சாயிணி, தனது,தாய் மற்றும் சகோதிரியிடம் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் காந்திராஜ் மற்றும் மருத்துவமனை கொடுத்த தொந்தரவு தான் காரணம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

எப்பொழும் எல்லோரிடத்திலும் எளிமையாகவும், சுறுசுறுப்புடன் இருக்கும் தங்களுடைய மகளை மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளது. தங்கள் மகளின் மரணத்திற்கு மருத்துவர் தான் காரணம், அவர் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாட்சாயிணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது. 

இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தெரிவிக்கையில் தற்கொலை செய்து கொண்ட தாட்சாயிணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு நர்ஸ் செல்போனை திருடி விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து மருத்துவமனை நிர்வாகம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தாகவும், தன்னை திருடி என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் மனமுடைந்து தாட்சாயிணி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றனர். 

மேலும் அவருக்கு வேற எதுவும் பிரச்சினை மற்றும் தொந்தரவு எதுவும் இருந்தத என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். அவருடைய பணியாற்றிய பெண் ஊழியர்களிடம் கேட்ட போது தாட்சாயிணி நல்ல பெண், மற்றபடி எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். தாட்சாயிணி தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா இல்லை திருட்டு பட்டம் சுமந்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறும் எதுவும் காரணமா? என்பது காவல்துறையின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors

Universal Tiles BazarNalam Pasumaiyagam

Johnson's Engineers

selvam aqua

CSC Computer Education

Thoothukudi Business Directory