» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர்அடித்துக் கொலை: மாஜி அதிமுக செயலர் உள்பட 2 பேர் கைது - பரபரப்பு பின்னணி தகவல்கள்

வியாழன் 21, செப்டம்பர் 2017 5:29:28 PM (IST)

திருவைகுண்டத்தில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட வழ்ககில் மாஜி அதிமுக நகர செயலாளர் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர். கொலை குறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகிஉள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (58). இவருக்கும், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மகேஸ்வரி (38) என்பவருக்கும் 14 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகேஸ்வரியின் தாய்மாமன் மகன் சக்திவேல்(25). தென்காசி கீழப்புலியூர் உச்சிமாகாளி மகனான இவர் அடிக்கடி திருவைகுண்டத்தில் உள்ள மகேஸ்வரி வீட்டிற்கு வந்து போய் உள்ளார். இது மாடசாமிக்கு பிடிக்கவில்லை. அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் சக்திவேல் கேட்கவில்லை என்று தெரிகிறது. 

இதுமாடசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  நேற்று மாடசாமி தனது அக்காள் மகன் ரமேஷ் என்பவர் மூலம் சக்திவேலை தொடர்பு கொண்டு திருவைகுண்டம் வரவழைத்துள்ளார். இங்கு வந்த சக்திவேலை அவர்கள் அக்காள் வீட்டு மாடியில் வைத்து அடித்துகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி நேற்று மாடசாமியை கைது செய்தனர். இன்று அவரது அக்காள் மகன் ரமேஷ் சிக்கினார். இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

இதற்கிடையில கொலையான சக்திவேல் தந்தை உச்சிமாகாளி இன்று காலை திருவைகுண்டம் வந்து போலீசில் புகார் செய்தார், அதில் எனது மகன் மகேஸ்வரிக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளான். அதை வசூலிக்க அடிக்கடி வந்து போய் உள்ளான். இதை தவறாக நினைத்து அவனை அநியாயமாக கொன்று விட்டார்கள் என கூறியுள்ளார். சக்திவேல் வட்டி பணம் காரணமாகத்தான் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என விசாரணை நடக்கிறது. 

வாலிபர் சக்திவேல் கொலையில் கைதான மாடசாமி திருவைகுண்டம் நகர அதிமுக முன்னாள் நகரச் செயலாளராக இருந்துள்ளார். தற்போது விவசாய சங்கதலைவராக உள்ளார். 75ம் ஆண்டு வாக்கில் இரட்டை கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு இவர் மீது இருந்துள்ளது. அதிலிருந்து விடுதலையான இவர் அதன்பிறகு அரசியலில் ஆர்வம் காட்டிகட்சி பணியாற்றிவந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Johnson's Engineers


selvam aqua

New Shape Tailors
Universal Tiles BazarThoothukudi Business Directory