» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதலை கண்டித்த தந்தை அடித்துக் கொலை: நாடகமாடிய மகள்..தப்பியோடிய வாலிபருக்கு வலை!!

சனி 30, செப்டம்பர் 2017 11:07:48 AM (IST)

தூத்துக்குடி அருகே தனது மகளுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்த முதியவரை தாக்கி படுகொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அரியநாயகம் (70). இவரது மகள் சண்முக லெட்சுமி (35). இவரது கணவர் சங்கர், கடந்த 8 ஆணடுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் சண்முக லெட்சுமி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன் மகன் விஜி (40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில், சண்முகலெட்சுமிக்கும் விஜிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்றிரவு இவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த அரியநாயகம், தனது மகளுடன் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு விஜியை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜி, அங்கு கிடந்த இரும்பு கம்பியால் அரியநாகத்தை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அரியநாயகம் சமபவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், தந்தை கொலை செய்யப்பட்டதை மறைத்து சண்முகலெட்சுமி, அவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். மேலும், அரியநாகத்தின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று காலை நடந்து வந்தது. 

அப்போது அரியநாகத்தின் தலையில் ரத்தக்காயம் இருப்பது தெரியவந்ததால். சிலர் அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து புல்லாவெளி ஊர்த்தலைவர் விஜயன், ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று அரியநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சண்முக லெட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது, அருமைநாயகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்படாக ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய விஜியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கொலையை மறைத்ததாக சண்முகலெட்சுமி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam


CSC Computer Educationselvam aqua

Johnson's Engineers


New Shape Tailors

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory