» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்தசஷ்டி விழா: அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 10, அக்டோபர் 2017 4:17:58 PM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 25-ம் தேதி (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா – சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 25-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 25.10.2017 (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் 25.10.2017 அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக அடுத்த நவம்பர் மாதம் 11-ம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


selvam aqua




Thoothukudi Business Directory