» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்தில் இருந்து குதித்த கல்லூரி மாணவி படுகாயம்

புதன் 11, அக்டோபர் 2017 10:50:12 AM (IST)

சாத்தான்குளம் அருகே பேருந்தில் இருந்து திடீரென குதித்த கல்லூரி மாணவி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள அம்பலத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட் கோவில்ராஜ். இவரது மகள் அபிஷா(19) நாசரேத் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் 3வது ஆண்டு படித்து வருகிறார்.இவர் இன்று காலை, கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி மாலட்டம் பனைக்குளம் அருகே வரும் போது கல்லூரி பேருந்தில் இருந்து கீழே குதித்தார். 

இதில், படுகாயமடைந்த மாணவி உடனடியாக சாத்தான்குளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக குதித்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

JemyOct 11, 2017 - 02:06:44 PM | Posted IP 117.2*****

இட்ஸ் ஒன்லி தி ப்ளூ வேல் கேம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






crescentopticals



Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Thoothukudi Business Directory