» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி வியாபாரிகள் கோரிக்கை : எஸ்பி.,அனுமதி

புதன் 11, அக்டோபர் 2017 8:38:59 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு துாத்துக்குடியில் இரவு கூடுதல் நேரம் ஜவுளிகடைகளை  திறந்து வைத்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு துாத்துக்குடி எஸ்பி மகேந்திரன் அனுமதி அளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே பொதுமக்கள் புதுத்துணிகள் எடுப்பதற்கு வசதியாக அதற்கு முந்தைய நாட்கள் இரவு கூடுதல் நேரம் ஜவுளி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என துாத்துக்குடி நகர வியாபாரிகள், எஸ்பி மகேந்திரனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி வரும் அக்டோபர் 13 முதல் 16 ம் தேதி வரை இரவு 1 மணி வரையும்,அக் 17 ம் தேதி இரவு முழுவதும் கடைகளில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் துாத்துக்குடி நகர ஜவுளி வியாபாரிகளுக்கு அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது,குறிப்பிட்ட அந்த நாட்களில் ஜவுளி நிறுவனங்களில் அதிகமாக கூட்டம் இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் வாகனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ள இடத்தில் நிறுத்துமாறு கூறுவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைOct 13, 2017 - 11:26:06 AM | Posted IP 122.1*****

நன்றி!

ஸ்.சிவராமன்.Oct 12, 2017 - 08:57:59 PM | Posted IP 45.11*****

பாரதியஜனதாக்கட்சி சார்பாக.வாழ்துக்கள்.

ஆசீர்Oct 12, 2017 - 12:54:12 PM | Posted IP 61.2.*****

வாழ்த்துக்கள் காவல் கண்காணிப்பாளருக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


selvam aqua


New Shape Tailors

CSC Computer Education



Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory