» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் சாவு

வியாழன் 12, அக்டோபர் 2017 12:40:31 PM (IST)




தூத்துக்குடி துறைமுகம் அருகே சரக்கு பெட்டக லாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மதுரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (61). இவர், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து  இன்று காலையில் ஒரு சரக்கு பெட்டக லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு துறைமுக புறவழிச் சாலையில் உள்ள தனியார் சரக்கு பெட்டக கிடங்குக்கு சென்றார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே சென்றபோது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாராம்.
 
அப்போது,  லாரி நிறுத்திய இடத்தின் மேலே சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பி வழியாக லாரிக்குள் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், லூர்துசாமியின் உடலில் மின்சாரம் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும், லாரியின் டயர் பகுதியில் தீப்பற்றியதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைத்து லாரியை வேறு இடத்துக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

JAI AND PALANIOct 12, 2017 - 01:36:31 PM | Posted IP 117.2*****

ALL DRIVRERS THIS AREA PLS CAREFUL...........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




CSC Computer Education

Sterlite Industries (I) Ltd


selvam aqua

New Shape Tailors

Johnson's Engineers

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory