» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் இல்லங்களை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் உத்தரவு

வியாழன் 12, அக்டோபர் 2017 3:22:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், இயங்கி வரும் 75 குழந்தைகள் இல்லங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு : ஏடீஸ் கொசுப்புழு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில், சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் இயங்கும் 75 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் சிறார்கள் ஏடீஸ் கொசுப்புழு மற்றும் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க குழந்தைகள் இல்லங்களின் வளாகம் தூய்மையாக பராமரித்தல், ஏடீஸ் கொசுப்புழு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மாவட்டத்தில் இயங்கிவரும் 75 குழந்தைகள் இல்லங்களின் இல்ல வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். வளாகத்தில் டயர், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் குப்பைகள், பாலிதீன் பைகள், உணவு டப்பாக்கள் போன்ற வீணான பொருட்கள் ஏதும் இல்லாமல் தினந்தோறும் ஆய்வில் உறுதிசெய்ய வேண்டும். கட்டட மேற்கூரையில் நீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் பிளீச்சிங் பவுடரால் உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்யப்பட்டு, எந்தவொரு கொசுப்புழுவும் வளரா வண்ணம் மூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ அலுவலர்களின் ஆலோசனைப்படி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட வேண்டும். 

உடல்நலக்குறைவு ஏற்படும் சிறார்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஏடீஸ் கொசுப்புழு எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கவும், இல்ல வளாக தூய்மையினை உறுதி செய்து அதற்கான வாராந்திர சான்றினையும் வளாகம் தூய்மையாக உள்ளதற்கான புகைப்படங்களையும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், 176, முத்துச்சுரபி பில்டிங், மணிநகர், பாளைரோடு,    தூத்துக்குடி – 628 003 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க இல்ல நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's EngineersUniversal Tiles Bazar

selvam aquaNalam Pasumaiyagam

New Shape Tailors
Thoothukudi Business Directory