» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.28ல் ஏபிசிவீ பள்ளி வெள்ளிவிழா : விழாக்குழுத் தலைவர் வீரபாகு பேட்டி

வியாழன் 12, அக்டோபர் 2017 3:53:34 PM (IST)தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் பள்ளி வெள்ளிவிழா வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக விழாக்குழு தலைவரும் வஉசி கல்லூரி முதல்வருமான சொ.வீரபாகு செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி : குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களின் பெயரால் 1993 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில் 108 மாணவர்களோடும் 9 ஆசிரியர்களோடும் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 2289 மாணவர்களும் 105 ஆசிரியர்களும் உள்ளனர். எங்கள் பள்ளியில் ஏறத்தாழ 5256 புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஒன்று உள்ளது.  மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவர தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், அறிவியல் கழகம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. 

கலை, சதுரங்கம், பரதநாட்டியம், கீபோர்டு, தியானம், டேக் வான்டோ ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன. 1997 லிருந்து 10 ஆம் வகுப்பிலும், 1999 லிருந்து 12 ஆம் வகுப்பிலும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெற்று வருகிறார்கள்.  மாணவர்களின் கல்வி நலனுக்காகப் பௌதிகவியல், வேதியியல், கணினி, உயிரியல் ஆகிய பாடங்களுக்கான ஆய்வுக்கூடங்கள், ஆடியோ விசுவல் அரங்கம், விசுவலட், இணையதள அறை, தியான அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சீஸ்மோலாஜிகல் கண்காணிப்பு அறை ஒன்று, சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் நில நடுக்க அதிர்வுகளைப் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

2007 லிருந்து பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணச் சலுகையும், 485க்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு 50மூ கல்வி கட்டணச் சலுகையும் அளிக்கப்படுகிறது. இந்த வருடம் 7 மாணவர்கள் முழு கல்வி கட்டணச் சலுகையும், 6 பேர் 50சதவீதம், 9 பேர் 25சதவீதும் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சிற்றுந்துகள் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல இயக்கப்படுகின்றன.  தமிழக அரசின் கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி 84 மாணவர்கள் மழலைப் பள்ளி முதல் 3 ஆம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள். 

ஏறத்தாழ 1.65 லட்சம் ரூபாயை பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக நிர்வாகமே செலுத்தி வருகிறது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் வி. அன்பரசன், பூட்டானில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோல் அன்டு ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றான். வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் பள்ளி தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் முதலிடம் பெற்று வருகிறார்கள்.  லைம் கணேசன் வெற்றியாளர்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களின் முன்னேற்றம் பற்றிய தலைப்பில் ஆசிரியைகளுக்கும் உரையாற்றினார்.

கணக்கு பதிவாளர் பயிலகம் ரோகினி, நிர்வாக அதிகாரி, வணிகவியல் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளருக்கான (C.A) கல்வியைப் பற்றி அறிவுரை கூறினார். நினைவுக் கலைப் பற்றி  பி. மகாதேவன், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பற்றி எஸ். சந்திரசேகரன், ஆர். ஆத்ம இராமன் கணித வகுப்புகளுக்கான புதிய முறைகளைப் பற்றியும் வகுப்பு எடுக்க உள்ளார்கள்.  சிந்தடிக் டென்னிஸ் கோர்ட்டு, மினி மராத்தான், பழைய மாணவர்கள் சந்திப்பு, நீட், ஜேஈஈ, சி.எ. ஆகியவற்றுக்கான பயிற்று வகுப்புகள். வெள்ளிவிழா ஆண்டுக்கான ஆண்டுவிழா 28.10.2017 அன்று மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக அதிகாரி ஏ. கருப்பசாமி தலைமையில் நடைபெற உள்ளது. பேட்டியின்போது பள்ளி தலைவர் சேதுராமலிங்கம், செயலாளர் கணபதி, தலைமை ஆசிரியை சண்முகசுந்தரி, துணை தலைமை ஆசிரியை  மதிமணி, பேராசிரியை கீதாஸ்ரீ, ஆகியோர் உடனிருந்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


selvam aqua


Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

New Shape Tailors

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

Johnson's Engineers

Thoothukudi Business Directory