» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூருக்கு நடைபயணம்: 29 விவசாயிகள் கைது

வியாழன் 12, அக்டோபர் 2017 4:04:40 PM (IST)


கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற 29 விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படமால் இருக்கும் பயிர்காப்பீட்டுத் தொகையினை வழங்கமால் இருப்பதை கண்டித்தும், விரைந்து வழங்க வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி விவசாயிகளின் அனைத்து பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டனர். 

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து இந்த நடைபெயணம் துவங்கியது. மேலும், விவசாயத்திற்கு தனிபட்ஜெட் போட வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட 29 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



crescentopticals


Johnson's Engineers




Thoothukudi Business Directory