» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துத்துக்குடியில் மெட்டல் ஷீட் விழுந்து ஒருவர் படுகாயம்

வியாழன் 12, அக்டோபர் 2017 4:24:26 PM (IST)



துத்துக்குடியில் சாலையோர கடையின் மெட்டல் ஷீட் காற்றில் பறந்து பாதசாரி மேல் விழுந்து படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில், எஸ்.ஏ.வி விளையாட்டு மைதானம் அருகே நடை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையில் உள்ள மெட்டல் சீட் திடீரென காற்றில் பறந்தது. இது அவ்வழியாக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற பாளையங்கோட்டை வீர மாணிக்க புரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மீது விழுந்தது. 

இதில் படுகாயம் அடைந்த கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல் நடைபாதையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை, கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இவ்விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam



Universal Tiles Bazar

selvam aqua


Sterlite Industries (I) Ltd


Johnson's Engineers



Thoothukudi Business Directory