» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி அருகே புதிய சமுதாய நலக்கூடம் : சண்முகநாதன் எம்.எல்.ஏ. பார்வை

வியாழன் 12, அக்டோபர் 2017 6:12:22 PM (IST)





செய்துங்கநல்லூர்  எஸ்.என்.பட்டி   20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம்  கட்டும் பணியை சண்முக நாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியில் எம்.எல்.ஏ  தொகுதி மேம்பாட்டு நிதிசார்பில் கடந்த 2015&16 ல்  சமுதாய நலம் கட்ட 20 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி தற்போது கட்டி முடிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணிநடந்து வருகிறது. இந்த பணியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் பார்வையிட்டார்.மேலும் அவர் கூறியதாவது,  எஸ்.என்.பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்ப மக்கள் தங்களது கோயில் கொடைவிழா  மற்றும் திருமண விழா போன்ற  நிகழ்ச்சிகள் நடந்த போதுமான இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.   

நான் இவ்வூர் கோயில் கொடைவிழாவிற்கு  கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த போது அப்போதைய மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மூலமாக மனு அளித்தனர். உடனடியாக அவர்கள் பயன்பெற 20 லட்ச செலவில் எனது தொகுதி மேம்பாட்டு  திட்டம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து முடிந்துள்ளது. வருகிற மாதத்தில் இதன் திறப்பு விழா நடைபெறும். இதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது என்று கூறினார்.அவருடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வி.கோவில்பத்து அதிமுக ஊராட்சி செயலளர் அந்தோணிகுமார், ராஜா உள்பட பலர் வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

selvam aqua

Nalam Pasumaiyagam



New Shape Tailors


Universal Tiles Bazar


CSC Computer Education

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory