» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூறாவளி காற்றால் நிலை குலைந்த அரசு பேருந்து : பயணிகள் அச்சம்

வியாழன் 12, அக்டோபர் 2017 7:49:51 PM (IST)




செய்துங்கநல்லூரில் தீடீர் மழை மற்றும் சூறாவளி காற்றால் சுமார் 50 ஆயிரம் வாழைகள் சரிந்தன. மேலும் அரசுப்பேருந்து நிலைகுலைந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நெல்லை & தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கூட செய்துங்கநல்லூர் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதற்கிடையில் இப்பகுதியில் கருகும் வாழையை காப்பாற்ற தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்தனர். ஆனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்தும்கூட செய்துங்கநல்லூர் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. அதன்பின் தமிழக முதல்வர் ஈபிஎஸ் உத்தரவின் படி  பிசான சாகுபடிக்கு இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கருகும் வாழையை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீர் பாய்த்து வந்தனர். 

கடந்த வாரம் முழுவதும் தண்ணீர் பாய்த்த நிலையில் இனி எப்படியும் வாழையை காப்பாறி விடலாம் என நினைத்த விவசாயிகளுக்கு சூறாவளி காற்றால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு  மழை பெய்த போது சூறாவளி காற்று அடித்தது. இதில் விவசாயிகள் காப்பாற்றிய சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து கூறும் போது, இன்று மதியம் சுமார் 2.30மணி அளவில் நான் உள்பட சுமார் 60 பயணிகளுடன் அரசு பேருந்து திருசெந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வந்து கொண்டிருந்தோம்.திடீரென்று மழையுடன் அடித்த சூறாவளி காற்றால் எங்கள் பேருந்து அப்படியே நிலைகுலைந்து விட்டது. பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விடுமோ என பயம் ஏற்பட்டது. அனைவரும் கம்பியை இறுக்கி பற்றி கொண்டோம். 

இதற்கிடையில் சூறாவளி முடிந்த பிறகு எங்கள் பேருந்து கிளம்பியது. அதேநேரத்தில் இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் சரிந்து விழுந்து விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.சரியாக மழையும்  பெய்யவில்லை. பெய்த மழையும் சூறாவளி காற்றால் வாழைகளை சரித்த காரணத்தினால் இப்பகுதி விவசாயிகள் சோகத்துடன் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers


selvam aqua


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors



Thoothukudi Business Directory