» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் கார்டு புகைப்படம் அளிக்க நாளை சிறப்பு முகாம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 11:38:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் அளிக்க நாளை (அக். 14) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு 1.4.2017 முதல் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் புகைப்படம் இல்லாததால் சிலருக்கு மின்னனு குடும்ப அட்டை அச்சடிக்க இயலாமல் உள்ளது. புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  

அந்த பட்டியலில் உள்ள குடும்ப அட்டைதாராகள் தங்களது குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (அக். 14) நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது ஒப்படைக்கவேண்டும். புகைப்படம் கொடுத்தவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்னனு குடும்ப அட்டை உடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


selvam aqua




New Shape Tailors


Johnson's Engineers



Thoothukudi Business Directory