» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு பள்ளியில் கலை போட்டிகள்

வெள்ளி 13, அக்டோபர் 2017 3:32:16 PM (IST)

தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் என்டிபிஎல் சார்பில் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிட் (என்டிபிஎல்) மற்றும் ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேனிலைப்பள்ளி இணைந்து அனைத்து பள்ளிகளுக்கு இடையேயான கலை இலக்கியப் போட்டிகள். "என் பார்வையில் - ஊழலற்ற இந்தியா” என்ற தலைப்பில்; 13.10.2017, வெள்ளிக்கிழமையன்று ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றன.

பள்ளியின் முதல்வர் எம்.சுந்தரி வரவேற்றுப் பேசினார். பிரதி பொது முகைமையாளர் எம்.சுரேஷ்,( நிகழ்ச்சியின் உட்கருத்தை விளக்கினார். தலைமை நிர்வாக அதிகாரி எம். பிராபகர் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். தன் உரையில் ஊழலை எதிர்ப்பதில் மாணவர்களின் பங்கினைப் பற்றி விளக்கினார். பள்ளியின் தலைவர் ஜி. சேதுராமலிங்கம் ஏ.பி.சி.வீரபாகு பள்ளி, ஏ.பி.சி. வீரபாகு பள்ளி தாளாளர் மற்றும் செயலர் கணபதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கண்காணிப்பு(பொது மேலாளர் (ஓய்வு) எஸ். விஸ்வராஜன் ) மாணவர்களின் ஊழலற்ற இந்தியாவிற்கான கடமைகளை உணர்த்தினார்.

"என் பார்வையில் - ஊழலற்ற இந்தியா” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி (தமிழ், ஆங்கிலம்) நாடகம் (தமிழ், ஆங்கிலம்) பென்சில் ஓவியம், வண்ண ஓவியம், ரங்கோலி, மைம், பவர் பாயின்ட், தமிழில் புதுக்கவிதை முதலியவை நடைபெற்றன. 10 பள்ளிகளிலிருந்து 400 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை உற்சாகமாக வெளிப்படுத்தினர். என்.டி.பி.எல் பிரதி பொது முகமையாளர் எ. பெருமாள்சாமி, மின் தலைமை நிர்வாக அதிகாரி (மனித வளம்) பி. ராஜதுரை, மேலாளர் என். ஜவஹர், மனித வளம் கூட்டுறவு பிரதி பொது முகைமையாளர் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Sterlite Industries (I) LtdJohnson's Engineers

CSC Computer Education

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam


New Shape TailorsThoothukudi Business Directory