» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா

வெள்ளி 13, அக்டோபர் 2017 3:58:34 PM (IST)தூத்துக்குடியில் ரூ.24 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்ட முத்துநகர் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள புதிய நவீனமயமாக்கப்பட்ட முத்துநகர் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை இன்று தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

இவ்விழாவில் கோ–ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், கோ–ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், திருநெல்வேலி மண்டல கோ–ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் எம்.மரிய அந்தோணி மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக விளங்குகின்ற கோ–ஆப்டெக்ஸ், 1935ல் துவங்கப்பட்டு 82 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையாற்றி 83ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. இந்தியா முழுவதும் 195 விற்பனை நிலையங்களை கோ–ஆப்டெக்ஸ் தன்னகத்தை கொண்டு தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி, உற்பத்தி செய்யும் துணி இரகங்களை விற்பனை செய்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவினால் 2016–2017ஆம் ஆண்டில் ரூ.315.00 கோடி என்ற அளவில் விற்பனை புரிந்திட்ட கோ–ஆப்டெக்ஸ் நடப்பு ஆண்டில் மேலும் விற்பனையைப் பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும் 2016–2017ஆம் ஆண்டு தங்கமழை பரிசுத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட முத்துநகர் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் 2016–2017ஆம் ஆண்டின் கோ–ஆப்டெக்ஸ் தங்க மழை திட்டத்தில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிசாக 8கிராம், இரண்டாம் பரிசாக 4கிராம் வீதம் 20 நபர்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த வருடம் தங்க மழைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. புதியதாக திறந்து வைக்கப்பட்ட இவ்விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு புதுவரவாக எண்ணற்ற வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகள், அகிம்சா பட்டுப்புடவைகள், சேலம் பட்டுப்புடவைகள், மென்பட்டுப்புடவைகள், முகூர்த்த பட்டுப் புடவைகள் ஆர்கானிக் காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி சேலைகள், சிறுமுகை காட்டன் சேலைகள், குர்த்தீஸ், லினன்ஃகாட்டன் சட்டைகள், குல்ட் மெத்தை விரிப்புகள் மற்றும் ஏற்றுமதி துண்டுகள் மற்றும் பிரிண்டட் போர்வைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அனைத்து இரகங்களுக்கும் 30சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நவீனமயமாக்கப்பட்ட தூத்துக்குடி முத்துநகர் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு 2017–2018ஆம் ஆண்டிற்கு ரூ.150.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி உண்டு. வாடிக்கையாளர்கள் புதிய விற்பனை நிலையத்தை பார்வையிட்டு கைத்தறி துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களுக்கு நேசக்கரம் நீட்ட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என கோ ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

Nalam Pasumaiyagam
Universal Tiles Bazar


selvam aqua


New Shape TailorsThoothukudi Business Directory