» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையை சீரமைக்க கோரி மரக்கன்றுகளுடன் நூதன ஆர்ப்பாடம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 4:09:14 PM (IST)



கோவில்பட்டியில் பழுதடைந்த  சாலையை சீரமைக்க கோரி வாழை, மற்றும் தென்னங் கன்றுகளுடன் தமாகாவினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு  பார்க் சாலை,  கோவில்பட்டி நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்ககளும் செல்ல பயன்படுத்தக்கூடிய சாலை இந்த சாலைகள் தான். மேலும் வ.உ.சி. நகர், வெங்கடேஸ் நகர், வீரவாஞ்சி நகர் பகுதி மக்களின் பிரதனா சாலைகள் இவை தான்.

மேலும் இந்த பகுதியில் 5க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ- மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து, சேதமடைந்து காணப்படும் பார்க் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி, பயன்படுத்த முடியாத சாலைகளாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து நகராட்சி நிர்வாகம் 2வது குடிநீர் திட்டத்தினை காரணமாக கூறி சீரமைக்கமால் உள்ளனர். 

உயிர்பலி வாங்க தயராக உள்ள பார்க் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  சார்பில் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரக்கன்றுகளை நடும் அளவிற்கு சாலைகளில் பள்ளங்கள் உள்ளதாக கூறி கையில் வாழைக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளுடன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கல்நது கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

New Shape Tailors

Universal Tiles Bazar


Johnson's Engineers

Sterlite Industries (I) Ltd


CSC Computer Education



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory