» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் எய்ட்ஸ் ஆட்சி நடத்திய திமுகவுக்கு அரசை விமர்சிக்க தகுதியில்லை : அமைச்சர் பேட்டி

வெள்ளி 13, அக்டோபர் 2017 4:33:06 PM (IST)

தமிழக அரசை டெங்கு அரசு என விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் எய்ட்ஸ் ஆட்சி நடத்தியவர்கள் அவர்கள்தான் என  அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் கூறினார்.

தூத்துக்குடியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசுக்கள் பெரும்பாலும் வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் இருந்துதான் உருவாகிறது. குளிர்சாதன பெட்டிகளில் தேங்கியுள்ள நீரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

தமிழக அரசை டெங்கு அரசு என விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் எய்ட்ஸ் ஆட்சி நடத்தியவர்கள் அவர்கள்தான். திமுக ஆட்சியில்தான் மகராஷ்ட்ராவில் இருந்து விலைமாதர்களை தமிழகத்திற்கு அழைத்துவந்து விபச்சாரத்தை ஊக்குவித்தார்கள். தினகரன் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு சசிகலாதான் காரணம் என கருதுகிறேன். அதனால் பரோலில் வந்த சசிகலாவை நான் சந்திக்கவில்லை என்றார்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNalam Pasumaiyagam

selvam aqua

Johnson's Engineers
New Shape Tailors

Universal Tiles BazarThoothukudi Business Directory