» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடதிட்டங்கள் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

வெள்ளி 13, அக்டோபர் 2017 5:13:48 PM (IST)மத்திய அரசின் எந்தவித தேர்வுகளையும் சந்தித்து அதில் வெற்றி பெறும் வகையில் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 3000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பேரணியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ, ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, அறிவியல் பூங்கா மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் அட்டல் டிங்கரிங் ஆய்வகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது: மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா, தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என உத்தரவிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் ஆகியோர் பங்கேற்கும் இளைஞர் பேரணி, அறிவியல் கண்காட்சி, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. 

மேலும், மாணவ, மாணவியர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.26.932 கோடி பள்ளிக் கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கி, பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா, ஏழைகள் இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்று எண்ணினார். அவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்று கருதி, ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணணி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதனை இந்த அரசு மிக சிறப்பாக செயல்படுத்திவருகிறது. 

மத்திய அரசின் எந்தவித தேர்வுகளையும் சந்தித்து அதில் வெற்றி பெறும் வகையில் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 3000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. வருகின்ற நவம்பா மாதத்திற்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அத்துடன் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.483 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட உள்ளன. 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

2018 - 2019ம் ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019 - 2020 ஆம் ஆண்டில் 2, 7, 10, 12 வகுப்புகளுக்கும் 2020 - 2021 ஆம் ஆண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. 412 மையங்கள் மூலம் 102 மாணவர்குளக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளன. மேலும், மாணவ, மாணவியர்களின் உடலும், உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் யோகா மற்றும் விளையாட்டிற்காக 45 நிமிடங்கள் பள்ளி நேரத்தில் ஒதுக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ தெரிவித்ததாவது: தமிழகத்தில் மாணவ-மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நகரங்களை நாடிச்செல்வதில் ஏற்படும் சிரமங்களை களையும் பொருட்டு புதிய பள்ளிகளை தோற்றுவித்தல், தரம் உயர்த்துதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆய்வகங்களை ஏற்படுத்துதல் போன்ற பல திட்டங்களை மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகின்றது. தற்போது, நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளில் பயிற்சி பெறும் வசதி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தப்படவுள்ளது. 

இதனால் வரும் காலங்களில் போட்டித்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பயிலும் பள்ளிகளிலே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களும் நகர்புற மாணவர்களுக்கு இணையான பயிற்சி பெற முடியும். இந்த வசதிகளை மாணவ-மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றிடும் வகையில் 54 ஆயிரம் வினாடி - வினா கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. அனைத்து மாணவ-மாணவியர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் பெருமை சேர்க்கவேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் திருமதி.அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், தாய்கோ வங்கி துணைத்தலைவர் குற்றாலம் என்.சேகர், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர். இராமமூர்த்தி, தலைமை ஆசிரியை செல்வ வைஷ்ணவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar

New Shape Tailors

selvam aqua


Johnson's Engineers


Thoothukudi Business Directory