» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுழல் கேமராக்கள் கொண்ட வாகன ரோந்து சேவை : துாத்துக்குடி எஸ்பி தொடங்கி வைத்தார்

வெள்ளி 13, அக்டோபர் 2017 6:48:44 PM (IST)
தீபாவளியை முன்னிட்டு துாத்துக்குடியில் நாலாபுறமும் சுழலக்கூடிய கேமராக்கள் அடங்கிய வாகன ரோந்து  சேவையை எஸ்பி மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

சென்ற ஆண்டு காவல்துறைக்கும் வணிகர்களுக்கும் ஏற்பட்ட கசப்புணர்வை தீர்க்கும் வகையில் மாவட்ட எஸ்பி,மகேந்திரன் துாத்துக்குடியில் இரவு நேர கடைகள் திறக்க அனுமதி அளித்ததுடன் தற்போது வியாபாரிகளுடன் இணைந்து தீபாவளி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.துாத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நாலாபுறமும் சுழலக்கூடிய கேமராக்கள் அடங்கிய ரோந்து வாகனத்தை இயக்கி வைத்தார்.பின்னர் எஸ்பி,கூறும் போது துாத்துக்குடி பஜாரில் ஏற்படும் கூட்ட நெரிசல்,வாகன போக்குவரத்து சீரமைப்பு, குற்றதடுப்பு,மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாலாபுறமும் சுழலக்கூடிய கேமரா பொருந்திய ரோந்து வாகனங்களை துாத்துக்குடி நகர்,மற்றும் பஜாரில் 24 மணி நேரம் இயங்கும் என்றார். இந்த பாதுகாப்பு பணியில் 40 போலீ சார், 6 எஸ்ஐக்கள்,3 இன்ஸ்பெக்டர்கள்,40 போலீசார் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாக வணிகர்சங்கம் சார்பில் 150 தன்னார்வலர்களும் பணியிலிருப்பார்கள்.

துாத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பு புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூட்டநெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கோபுரம் ஏற்படுத்தப்படும்.கோவில்பட்டியிலும் தீபாவளியை முன்னிட்டு ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அங்கும் கண்காணிப்பு கோபுரம் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், மத்தியபாகம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd
CSC Computer Education

Universal Tiles Bazar

Johnson's Engineers


New Shape TailorsThoothukudi Business Directory