» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீபாவளி கொண்டாட மனைவி வரமறுத்ததால் விபரீதம் : வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை!!

வியாழன் 19, அக்டோபர் 2017 10:54:42 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி, முத்தையாபுரம் திருமாஜி நகரைச் சேர்ந்தவர் ராமு மகன் கன்னியப்பன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று, தனது தயாார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இதனால் கன்னியப்பன் மட்டும் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தீபாவளி கொண்டாட மனைவியை குழந்தைகளுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வரமறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த, கன்னியப்பன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

CSC Computer Education

selvam aqua

Johnson's Engineers

New Shape Tailors




Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory