» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே பரிதாபம்!!

வியாழன் 19, அக்டோபர் 2017 11:18:28 AM (IST)

தூத்துக்குடி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியை அடுத்த நாரைக்கிணறு அருகே உள்ள கலப்பைபட்டி கிராமம், வடக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாரதி (30). இவர்களது மகள் காரூண்யா (5). இந்நிலையில், பாரதிக்கு காசநோய் இருந்துள்ளது. மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தும் குணமாகவில்லையாம். இதனால் அவர் மனவேதனையடைந்தார். மேலும், தான் இறந்து விட்டால், தனது மகளை கவனிக்க ஆள் இல்லையே என்று கவலையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று அவர்கள் குடும்பத்தோடு புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடியுள்ளனர். பின்னர், பாரதி தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மின் விசிறியில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் பாரதியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து நாரைக்கிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையை கொன்ற, சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னரே பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிவந்துள்ளது. தீபாவளிக்கு வாங்கிய புத்தாடையில் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருந்தது. இதனால், பாரதி மீது கொலை வழக்கும், தற்கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேறு எதுவும் காரணம் உள்ளதா? என  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


crescentopticalsJohnson's EngineersNew Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory