» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-மதுரை இடையே புதிய ரயில் வழித்தடம்: ஆட்சியருடன் ரயில்வே மண்டல மேலாளர் ஆலோசனை

சனி 4, நவம்பர் 2017 3:35:27 PM (IST)



தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உடன், ரயில்வே மண்டல மேலாளர் நீனு இட்டாயா ஆலோசனை மேற்கொண்டார்.

தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலும், இரண்டாவது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரையிலும், மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரையிலும் பணிகள் நடைபெற உள்ளது. 

இதற்காக சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், தெற்கு வீரபாண்டியபுரம், மேலமருதூர், வடக்குசிலுக்கன்பட்டி ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் தனியார் நிலங்கள் 71 ஹெக்டேரும், அரசு நிலங்கள் 3.778 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நடைபெற உள்ள ரயில்வே திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உடன், ரயில்வே மண்டல மேலாளர் நீனு இட்டாயா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (4.11.2017) ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையின் போது ரயில்வே மண்டல மேலாளர், ரயில்வே பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவது, இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்திக்கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். ஆலோசனையின் போது மதுரை கோட்ட செயற்பொறியாளர் சந்துரு, உதவி செயற்பொறியாளர் தனராமன், உதவி பொறியாளர் முத்துக்குமார் உள்ளீட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

உண்மைNov 6, 2017 - 02:12:45 PM | Posted IP 122.1*****

நன்றி மோடி ஜி!

கிங்கேற்Nov 4, 2017 - 10:58:39 PM | Posted IP 117.2*****

குட் நியூஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



selvam aqua




Universal Tiles Bazar


New Shape Tailors



Johnson's Engineers



Thoothukudi Business Directory