» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலுக்கு சென்ற மீனவர் மாரடைப்பால் மரணம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:25:17 AM (IST)

தூத்துக்குடியில் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் முத்தரையர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் கோவிந்தராஜ் (27) கடல் தொழிலாளி. நேற்று நாட்டுப் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து உடனடியாக மீனவர்கள் கரை திரும்பினர். பின்னர், அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

aRUNNov 14, 2017 - 04:03:54 PM | Posted IP 27.62*****

சிலிண்டர் மூலம் சங்கு எடுப்பதால் வந்த விளைவு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

Johnson's Engineers



Nalam Pasumaiyagam

New Shape Tailors

selvam aqua




Thoothukudi Business Directory