» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது போதையில் தகராறு : நண்பரை கொன்றவர் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:39:43 AM (IST)

தூத்துக்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள திருவழுதி நாடார்விளை கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சுமணி மகன் ஆத்திபழம் (48). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழநதைகளும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கிருஷ்ணசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (48). இவர்கள் இருவரும் உறவினர்கள். நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சேர்ந்தே கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

நேற்று மாலை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணமூர்த்தி, ஆத்திபழத்தை தள்ளிவிட்டாராம். அப்போது கீழே கிடந்த கல் குத்தியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Johnson's Engineers

Universal Tiles Bazar


selvam aqua




New Shape Tailors





Thoothukudi Business Directory