» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கோலப்போட்டி: ஆட்சியர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டார்.

செவ்வாய் 14, நவம்பர் 2017 3:48:07 PM (IST)



தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான கோலப்போட்டி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், பார்வையிட்டார்.   

தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்வரும் நவம்பர் 22ம் தேதி, கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான நடைபெற்ற கோலப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: நமது மாவட்டத்தில் வருகிற 22.11.2017 அன்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான கோலப்போட்டி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்களுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. 

முதல் கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார அளவில் கோலப்போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசு பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி நேற்று (13.11.2017) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 10 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்புகளும், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஆகியவற்றிலிருந்து தலா ஒரு குழுவும் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நமது மாவட்டத்தில் வருகிற 22.11.2017 அன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்குவார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜெ.ரேவதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

Johnson's Engineers

New Shape Tailors



Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam


selvam aqua



Thoothukudi Business Directory