» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் பாலிசி எடுக்க அரசு அனுமதி

செவ்வாய் 14, நவம்பர் 2017 4:50:09 PM (IST)

அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் பாலிசி எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வி. ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன, அரசு ஊழியர்கள் மட்டுமே அஞ்சல் ஆயூள் காப்பீடு பாலிசி எடுக்க இதுவரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பாலிசி எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அஞ்சல் துறை இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. குறைந்த பிரிமியம், அதிக போனஸ். செலுத்தும் ப்ரீமியத் தொகைக்கு வருமான வரிச்சலுகை உண்டு. 100% உத்தரவாதம். பிரிமியம் இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். முதிர்வு தொகைக்கும் வருமான வரி கிடையாது. கணவன் மனைவி சேர்ந்து எடுக்கக்கூடிய Joint Life Policy உண்டு.  கடன்பெறும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd


selvam aqua

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory