» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலைய பாதையை மீண்டும் திறக்க கோரி கோவில்பட்டியில் சி.ஐ.டி.யூ அமைப்பினர் போராட்டம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:31:10 PM (IST)



கோவில்பட்டியில் பேருந்து நிலைய பின் பாதையை மீண்டும்  திறக்க கோரி சி.ஐ.டி.யூ அமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவில்பட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் சமீபத்தில் ரூ.5கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியின் பின்புறம் நடைபாதை செயல்பட்டு வந்தது.இந்த பாதை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட போது அடைக்கப்பட்டது. இதனால் பின்புற பாதையை பயன்படுத்தி வந்த ஆசிரமம் தெரு, முத்தானந்தபுரம் தெரு, பகத்சிங் தெரு, வ.வு.சி நகர், வீரவாஞ்சிநகர் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 

மேலும் பள்ளிகுழந்தைகள், முதியோர்கள், வியாபாரிகள் மற்றும் அந்த பகுதியில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்பவர்கள் சிரமப்பட்டு வருவதால் மீண்டும் பாதையை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. அமைப்பினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ. அமைப்பின் நிர்வாகி கொம்பையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் 5வது தூண் அமைப்பினர், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors


Nalam Pasumaiyagam


Johnson's Engineers

selvam aqua

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd





Thoothukudi Business Directory