» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீயில் கருகி இளம்பெண் சாவு... கணவர் படுகாயம் - போலீஸ் விசாரணை

புதன் 15, நவம்பர் 2017 8:04:26 AM (IST)

திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் முத்து நகரை சேர்ந்தவர் சுயம்புராமன் (35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (29). இவர்களுக்கு லிங்கேஷ் (7) என்ற மகனும், சுவாதி (5) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். சுயம்புராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் சுயம்புராமன் மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதேவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதனால் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்துள்ளார்.. உடனே சுயம்புராமன் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பலத்த தீக்காயம் அடைந்த கணவன்– மனைவியை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு முதலுதவிக்கு பின்னர், அவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதேவி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த தீக்காயம் அடைந்த சுயம்புராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers






New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Thoothukudi Business Directory