» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது

புதன் 15, நவம்பர் 2017 8:12:35 AM (IST)

சாத்தான்குளம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகள் மகேஸ்வரி (25). சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி பன்னம்பாறை விலக்கில் ஊருக்கு செல்ல நின்றபோது பைக்கில் வந்த 3 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து, திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி (19) என்பவரை கைது செய்தனர். 

மேலும் இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, சங்கரன்குடியிருப்பு விலக்கில் பதுங்கி இருந்த இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த வா. சுடலைக்கண் (21), மணிகண்டன் என்பதும், ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகையை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd


New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory