» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மலேசிய மணல் விற்பனையை அனுமதிக்க முடியாது : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதன் 15, நவம்பர் 2017 8:48:20 AM (IST)

தமிழகத்தில் மலேசிய மணல் விற்பனையை அனுமதிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், திருவக்குடியை சேர்ந்த ராமையா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் அனுமதியுடன் மலேசியாவில் இருந்து கப்பலில் 55,443 மெட்ரிக் டன் மணல், கடந்த மாதம் 14ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை எடுத்து செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், துறைமுகம் சார்பில் தாமத கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘தமிழகத்தில் இறக்குமதி செய்ய முதலில் அரசிடம் முறையான அனுமதி பெறவேண்டும். மலேசிய மணலை இறக்குமதி செய்ய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. சட்டவிரோதமாக கடல் வழியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் மணல் விற்பனை அரசின் மூலமே நடக்கிறது. தனியார் விற்பனையை அனுமதிக்க முடியாது. மலேசிய மணல் இயற்கையானது அல்ல என்ற சந்தேகம் உள்ளதால், கட்டுமானப்பணிக்கு உகந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. மலேசிய மணல் விற்பனையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது’ என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ளோம். ஜிஎஸ்டி வரியாக ரூ.39 லட்சத்தை செலுத்தியுள்ளோம். தமிழகத்தில் அனுமதிக்காவிட்டால் கேரளாவிற்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கும்போது, விற்பனையை எப்படி தடுக்க முடியும்? எந்த விதியின் கீழ் தமிழகத்தில் மறுக்கிறீர்கள்’ என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல், ‘தமிழக அரசின் அனுமதியில்லாமல் இறக்குமதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் சாலை வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது’ என்றார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் கேரளா கொண்டு ெசல்ல அனுமதி கோரி புதிதாக மனு செய்யுமாறு கூறிய நீதிபதி, விசாரணையை 15ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து

KARNARAJNov 17, 2017 - 11:26:42 AM | Posted IP 62.23*****

Intha corrupted government must be thrown out. USELESS.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


CSC Computer Education

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd

selvam aqua

Nalam Pasumaiyagam

New Shape Tailors





Thoothukudi Business Directory