» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் பழுதால் 3 மாதம் குடிநீர் விநியோகம் பாதிப்பு: சாத்தான்குளம் பேருராட்சியில் மக்கள் அவதி!!

புதன் 15, நவம்பர் 2017 10:24:20 AM (IST)

சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 3 மாதமாக மோட்டார் பழுது சரி செய்யாமல் உள்ளதால் பேருராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரிய குடிநீரேற்றும் நிலையம் உள்ளது. இங்கு பொன்னங்குறிச்சியில் வரும் கூட்டுகுடிநீர் ஏற்றிட இரு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலையத்தில் தண்ணீர் ஏற்றப்பட்டு பம்பிங் செய்யப்பட்டு சாத்தான்குளம் பேருராட்சி 15 வார்டு பகுதிக்கும் 3 பிரிவாக பிரித்து 3நாள்களுக்கு ஒரு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3மாதத்திற்கு முன் தண்ணீர் ஏற்றிடும் அதிக பவர் கொண்ட மின்மோட்டர் திடீரென பழுதடைந்தது. இதனால் மீதமுள்ள மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இதனால் முறையாக தண்ணீர் ஏற்றமுடியாமல் குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 3 நாளுக்குள் வர வேண்டிய தண்ணீர் 5நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கிட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு 3மணி நேரம் வழங்கப்படும் தண்ணீர் தற்போது இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிவாரிய நிர்வாகியிடம் கேட்டால் பழுதான மோட்டார் காயில் மாற்ற கொண்டு செல்லப்பட்டுள்ளது. வந்ததுடன் மாற்றிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கின்றனர். ஆதலால் பழுதான மின்மோட்டாரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Johnson's Engineers

selvam aqua





Thoothukudi Business Directory