» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 11:34:21 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி, பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் செல்வக்கனி (14), குரும்பூர் அருகே பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்துவந்த அவர், மழை காரணமாக கடந்த 28ம் தேதியில் இருந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வீடுதிரும்பினார். 

அப்போது வீட்டு வேலைகளை செய்யதாதால் தாயார் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த செல்வக்கனி, குளியலறைக்குச் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலி்ல்  பலத்த தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education



Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua




Thoothukudi Business Directory