» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓக்கி புயலில் சிக்கிய தூத்துக்குடி மீனவர்கள் 3பேர் உடல்கள் மீட்பு : உறவினர்கள் கதறல்

செவ்வாய் 5, டிசம்பர் 2017 7:15:53 PM (IST)

ஓக்கி புயலில் கானாமல் போன தூத்துக்குடி மீனவர்கள் 3பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு தொம்மையார் காலனியை சேர்ந்த ஜுடு (43), பரத் (19), ரவீந்திரன் (50), ஜோசப் (70), கினிஸ்டன் (45), ஜெகன் (35) ஆகியோர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நவம்பர் 29, 30 தேதிகளில் வீசிய ஓக்கி புயலில் இவர்கள் மீன் பிடித்த படகு சிக்கி கவிழ்ந்தது. அதில் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் ஜெகன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் டிசம்பர் 2 அன்று விழிஞ்சம் கடற்கரையில் சில மீனவர் உடல்கள் கரை ஒதுங்கியது. மீட்கப்பட்ட உடல்கள் திருவனந்தபுரம் ஜெனரல் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விபரம் கேள்விப்பட்ட பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் திருவனந்தபுரம் சென்று தங்கள் உறவினர்கள் உடல்கள் உள்ளதா என்று விசாரித்தனர்.  இதில், வின்சென்ட் மகன் ஜூடு (43), சார்லஸ் மகன் ரவீந்திரன் (43), சோரீஸ் மகன் ஜோசப் (55) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. ஜூடு மகன் பரத் (19), சோபியாசா மகன் கினிஸ்டன் (45) ஆகியோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடல்கள் அனைத்தும் சேதமடைந்து அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பது மிக கடினம் என்பதால் உறவினர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி பொரன்சிக் லேபாரட்டரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை அன்று டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பின்னர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிய வருகிறது. மீனவர்கள் பலியான சம்பவம் அப்ப்குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam





Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua

CSC Computer Education



Thoothukudi Business Directory