» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வியாழன் 7, டிசம்பர் 2017 11:05:59 AM (IST)

தூத்துக்குடி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் கன்னிராஜா (38) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி கன்னிராஜா தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். 

ஆனால் செல்வி வர மறுத்துள்ளார். இதில் மன வேதனையடைந்த கன்னிராஜா தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கன்னிராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers






New Shape Tailors


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory