» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டோல்கேட் அருகே விபத்து: 2பேர் உயிரிழப்பு - 13பேர் படுகாயம்

வியாழன் 7, டிசம்பர் 2017 11:12:38 AM (IST)

தூத்துக்குடியில் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2பேர் உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம், ஓமனூர் அருகே உள்ள பஞ்சிகாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சரவணன் (25) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் வேன் புறப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில், தூத்துக்குடி - எட்டயபுரம் ரோடு, கீழஅரசரடி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், வேனின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கி, ரகுநாதன் மகன் நவீன் (23) என்பவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்தில், படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உப்புலி மனைவி லெட்சுமி (50) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில் காயம் அடைைந்த 7பெண்கள், ஒரு குழந்தை உட்பட 13பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Johnson's Engineers



Thoothukudi Business Directory