» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பாடு : வைகோ குற்றச்சாட்டு

வியாழன் 7, டிசம்பர் 2017 12:24:15 PM (IST)



ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மதிமுக பொதுச் செயலளார் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் மதிமுக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தார்.. தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசிலினையின் போது நடிகர் விஷால் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்து, பின்னர் ஏற்கொள்ளப்பட்டாக அறிவித்து, அதன்பின்னர் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தது. தேர்தல் அதிகாரியின் மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு உத்தரவுக்கு இணங்க தேர்தல் அதிகாரி செயல்படுகிறார் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. 

தேர்தல் ஆணையம் இது குறித்து என்ன செய்யப்போகிறது. தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவு இறுதியானது என்றால், அவர் தேர்தலை இது போன்று தான் நடத்தி செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆற்று மணலை சுரண்டி தமிழகத்தினை நிரந்தரமாக பாலைவனமாக மாறவிடமால் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சிறப்பான ஆணை வழங்கியது அதற்கு  எதிராக தமிழக அரசு மேல் முறையிடு செய்ததது கண்டிக்தக்கது. எம்.சண்டல் செயற்கை முறையிலான மணல் தயாரிக்க உற்பத்தியாளர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் அரசு அனுமதிக்க முன் வர வேண்டும், வெளிநாடுகளில் இருந்து தங்கு தடையின்றி மணல் இறக்குமதி செய்ய அனுமதி தரவேண்டும்.

ஆளுர் பன்வாரிலால் புரோகித் மாநில முதல்வர் போன்று செயல்படுகின்றார். கோவை, நெல்லைக்கு சென்று போது பொதுமக்கள் மத்தியில் இவர் தான் ஆட்சி நடத்துகின்றார் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தும் நடத்து கொண்டது கூட்டாட்சிக்கு பெரும் ஆபத்து, தமிழக சரித்திரத்தில் இது போன்று நிகழந்தது கிடையாது. ஆளுநரின் போக்கு தமிழகத்தில் இரட்டை ஆட்சிமுறை நடைபெறுவதை காட்டுகிறது. ஆளும் கட்சி டெல்லிக்கு சேவகம் செய்யும் நிலைமை, ஆளுநர் டெல்லியின் ஏஜெண்டாக செயல்படுகிறார். இதனை மதிமுக கடுமையாக கண்டிக்கிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers



selvam aqua


Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory