» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபை பேராயராக குருவானவர் எஸ்.மாணிக்கம் பதவி ஏற்பு!

வியாழன் 7, டிசம்பர் 2017 5:06:17 PM (IST)



அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பேராயராக நாசரேத் தூயயோவான் கதீட்ரலில் முன்னாள் தலைமைக் குருவானவர் எஸ்.மாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் பத்துக்கும் மேற்பட்ட பேராயர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தை சேர்ந்தவர் குருவானவர் எஸ்.மாணிக்கம். இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை சாயர்புரத்தில் படித்துவிட்டு இறையியல் பட்டபடிப்பை கல்லூரியில் முடித்தார். தனது 25 வயதில் திருநெல்வேலி திருமண்டலத்தில்,குருவாக அபிஷேகம் பெற்றார். 1981 முதல் 1983 வரை பாளையங்கோட்டை கதீட்ரலில் உதவி குருவா னவராகவும்,தன்னுடைய 32-வதுவயதில் இந்திய மிஷனெரி சங்க பொதுக் காரியதரிசியாகவும் பொறுப்பேற்றார்.இளம்வயதில் இவர்,இந்திய மிஷனெரி சங்கபொதுக்காரியதரிசியாக பணியாற்றியவர் என்றபெருமையை பெற்றார்.  

திருநெல்வேலி திருமண்டலம் இரண்டாகபிரிக்கப்பட்டு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் உதயமானதும் 2006-இல் நடைபெற்ற பேராயர் தேர்வு பட்டி யலில் 4 பேர்களில் ஒருவராக வெற்றி பெற்றார். 2007 முதல் 2009-வரை திருமண்டலத்தின் குருத்துவச் செயலாளராக பணியாற்றினார். 2014 முதல் 2015 வரை நாசரேத் தூயயோவான் கதீட்ரலில் தலைமைப் பாதிரியராக வும்,அதன்பின் 2 ஆண்டுகள் துபாயில்உள்ள தமிழ் சி.எஸ்.ஐ. திருச்சபை யில் ஆயராகவும் பணியாற்றியுள்ளார்.சி.எஸ்.ஐ. நிர்வாகத்தில் 38 ஆண்டு கள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.இவரது பணியை பாராட்டி அப் போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின்பிரதமப்பேராயர் டாக்டர்.எஸ்.எம். ஜெயக்குமார்,அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட திருச்சபையின் பேராயராக அறிவித்தார்.

பேராயராக அறிவிக்கப்பட்ட குருவானவர் எஸ்.மாணிக்கம் பதவி ஏற்பு விழா சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள எபிரோன் ஆலயத்தில் வைத்து நடந்தது. அப்போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் புதிய பேராயராக குருவானவர் எஸ்.மாணிக்கத்தை அப் போஸ்தல பிராட்டஸ்டன்ட் திருச்சபையின் பிரதமப் பேராயர் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் திருச்சபையில் பிரகடனம் செய்து பேராயராக அபிஷேகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலைமாமணி, செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் தலைமை வகித்தார்.ஆர்ச் பிஷப் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,பிஷப் டாக்டர் வி.தேவசகாயம், பிஷப் டாக்டர் டி.தயானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பேராயர்கள் டாக்டர் சி.இ.ராஜ்கிஷோர், டாக்டர் பிரான்சிஸ் தங்கத்துரை, டாக்டர் பி.ஆர்.ஆசீர்வாதம், டாக்டர் எஸ்.பிரடி, டாக்டர். கொர்னேலியஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ், ஆங்கலிக்கன் திருச்சபை பேராயர் ராஜ் கிஷோர் உள்பட திரளான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஷேரன், டாக்டர் ஏ.வெஸ்லி, டாக்டர் டி.பிரபு ஆகியோர் தலைமையில் விழாக்குழு வினர்கள் டாக்டர் எல்.ஏ.சுந்தர்ராஜ், டாக்டர் எல்.ராபர்ட்,டாக்டர் ஜெகதீஷ், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் ரஷ்கின்,டாக்டர் ஏ.சாமுவேல்,டாக்டர் சார்லஸ், ரெவரென்ட் இதயதீபா,ரெவரென்ட பியூலா, ரெவரென்ட ஜெயந்தி, பாஸ்டர் அனிதா மற்றும் சபைமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

John/catichest at vellarikkauraniDec 8, 2017 - 08:33:20 AM | Posted IP 49.13*****

Glory to god

தமிழ்ச்செல்வன்Dec 7, 2017 - 06:59:49 PM | Posted IP 61.3.*****

இந்த சபையில் காசு கொடுத்தா யார் வேண்டுமானாலும் பேராயர் ஆகலாம். இது ஒரு டுபாக்கூர் கம்பெனி. யாருக்காவது டாக்டர் பட்டம் வேணும்னா அல்லது பிஷப் பதவி வேணும்னா அணுகவும் www.manickam .com இப்படிக்கு மரம்வெட்டி மாணிக்கம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education


Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar




selvam aqua


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory