» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓரே நாளில் 36,526 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!!

வியாழன் 7, டிசம்பர் 2017 5:36:45 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஓரே நாளில் 36,526 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் -1ல் 06.12.2017அன்று ஓரே நாளில் ஏஸியன் சாம்பியன் என்ற கப்பலிலிருந்து 36,526 மெட்ரிக் டன் அனல்மின் கரி கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான வடக்கு சரக்கு தளம் 1-ல் 30.10.2016 அன்று டென்டன்ஸ் என்ற கப்பலிலிருந்து கையாளப்பட்ட அளவான 35,656 மெட்ரிக் டன் அனல்மின் கரியை விட அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையின் கப்பல் முகவர் சிக்கால் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆவர்.

இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஜெயகுமார் பாராட்டியதுடன், இனி வருங்காலங்களில் இது போன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய கேட்டுக் கொண்டார். இத்தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD







New Shape Tailors



Johnson's Engineers

crescentopticals



Thoothukudi Business Directory