» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெய்லரை தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

செவ்வாய் 12, டிசம்பர் 2017 8:28:11 AM (IST)

சாத்தான்குளம் அருகே டெய்லரை தாக்கியதாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இளமால்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்(52). இவர் ஆனந்தபுரத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ம.ஜெய்சிங்(54), ஆட்டோ ஓட்டுநர். கடந்த சில நாள்களுக்குமுன் கணேசன், ஜெய்சிங்கை அழைத்தபோது அவர் காது கேட்காதவர் போல் சென்றுவிட்டாராம். மேலும் ஜெய்சிங்கை அவதூறாக பேசினாராம்.
 
இதுகுறித்து ஜெயசிங், அவரிடம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஜெய்சிங், அவரது மகன் பிரவீன்(21), உறவினர் சேர்மதுரை (57) ஆகியோர் கணேசனை தாக்கினராம். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஆழ்வார் வழக்குப் பதிந்து தந்தை, மகன் உள்பட 3 பேரையும் நேற்று கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazarselvam aqua

New Shape TailorsJohnson's Engineers
Thoothukudi Business Directory