» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் தாமதம்

செவ்வாய் 12, டிசம்பர் 2017 10:11:21 AM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே நேற்று மாலை 5.55 புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் இன்ஜின் பழுதால் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்ஜின் இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டது.

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே வழக்கமாக மாலை 5.55 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படும். இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்றுமாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் இன்ஜின் பழுதால் ஒரு மணி நேரம் காலதாமதமாக இரவு 7 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பயணிகள் ரயிலுக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜினை மாற்றி இயக்கப்பட்டது. 

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இரவு 7 மணிக்கு புறப்பட வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருநெல்வேலியிலிருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் ரயில் தாமதம் குறித்து பயணிகளுக்கு முன் அறிவிப்பு கொடுக்காததால் வழக்கமாக புறப்பட்டு செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளும் முறையான பதிலளிக்க மறுத்துவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


Universal Tiles Bazar

selvam aqua


New Shape Tailors









Thoothukudi Business Directory